காவிரியில் நமது உரிமை மீட்புப் போர் தமிழக மெங்கும் தன்னெழுச்சியாக நடந்துவருகிறது. சாதி, மதம், அரசியல் மாச்சர்யங்களைக் கடந்து ஒருங்கிணைந்த எழுச்சிப் போராட்டமாக நடந்துவருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்விதமாக தமிழ்த் திரை உலகமும் போர்க்களத்தில் குதித்தது.

Advertisment

ajith

கடந்த 8-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை அமைதியான முறையில் திரை உலகினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தது சென்னை மாநகர காவல்துறை.

காலை 8-45 மணிக்கு முதல் ஆளாக வந்தார் விஜய்.

அதன்பின் நடிகர் சங்க நிர்வாகிகள், முன்னணி நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். காலை 11 மணி அளவில் கொஞ்ச நேர இடைவெளியில் ரஜினியும் கமலும் வந்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது சிலருக்குப் பேச வாய்ப்பளித்து, சிலருக்கு வாய்ப்பளிக்காவிட்டால் சர்ச்சையாகும், சிலரது பேச்சால் பலருக்கு சங்கட்டமாகும் என்பதால், யாரும் பேச வேண்டாம் என முன்கூட்டியே முடிவெடுத்தது நல்லதாப் போச்சு.

Advertisment

actor-fasting

முன்னணி ஹீரோக்கள் எல்லாரும் போராட்டக்களத்திற்கு வந்தனர். ஆனால் வழக்கம்போல் அஜீத் மட்டும் டிமிக்கி கொடுத்து எல்லாரது கடுப்பையும் சம்பாதித்தார். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பில் இருந்தனர். சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவர், சக தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசும்போது, ""அஜீத் ஹீரோவா நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு வராம இருப்பதற்கே அவர்மேல் ஆக்ஷன் எடுக்காமவிட்டது தப்பாப் போச்சு. சரி, அதுதான் தொலையுது சனியன், அவர வச்சு படம் எடுக்கும் தயாரிப்பாளரச் சொல்லணும். அதேபோல் நடிகர் சங்கக் கூட்டங்களுக்கும் வராம டிமிக்கி கொடுத்துக்கிட்டிருக்காரு.

actors-fasting

Advertisment

ஜல்லிக்கட்டுப் பிரச்சனையப்ப, நடிகர் சங்க காம்பவுண்டுக்குள்ள உண்ணாவிரதம் இருந்ததால, பின்பக்கமா வந்துட்டு பின்பக்கமாவே போனார். இப்ப என்னடான்னா, தமிழ்நாடே கொதித்தெழுந்து போராடும்போது, நம்ம பங்களிப்பும் இருக்கணும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்னுதான் நாம ஆர்ப்பாட்டம் செஞ்சோம்.

actors-fasting

ஆனானப்பட்ட ரஜினியும் கமலும் வந்துட்டாங்க. ஆனா அஜீத் மட்டும் வரலைன்னா என்ன அர்த்தம்? அவ்வளவு பெரிய அப்பா டக்கரா அவரு? நம்மளயெல்லாம் என்ன நினைச்சுக்கிட்டிருக்காரு?இனிமே அஜீத்தின் படங்களுக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லைன்னு கண்டிப்பான முடிவு எடுத்தாகணும். இல்லேன்னா அஜீத்தின் தான்தோன்றித்தனத்துக்கு முடிவே கிடைக்காது'' என பொங்கித் தீர்த்தார் அந்தத் தயாரிப்பாளர்.

அஜீத்தின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த கோலிவுட்டே கொந்தளிச்சுப் போய்க்கிடக்கு.

ஏன் தல என்னாச்சு தல உங்களுக்கு?

-ஈ.பா. பரமேஷ்வரன்

ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுந்தர்